உலக செய்திகள்

வருகிறது, 5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி + "||" + Comes, A car with 5 seats - Experiment triumph in Germany

வருகிறது, 5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி

வருகிறது, 5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி
ஜெர்மனியில் நடத்தப்பட்ட 5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றிபெற்றுள்ளது.
பெர்லின்,

வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வானில் பறந்து செல்லும் ஏர்டாக்சிகளை உருவாக்கி குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், இத்தகைய பறக்கும் காரை 2025-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. லில்லியம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் ‘ரிமோர்ட் கண்ட்ரோல்’ மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 4 பேர் பயணம் செய்யலாம்: ஜப்பானில் பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றி
ஜப்பானில் 4 பேர் பயணம் செய்ய கூடிய பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிபெற்றது.
2. ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார் - அமெரிக்காவில் அறிமுகம்
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட பறக்கும் கார், அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.