உலக செய்திகள்

அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி + "||" + In the United States, a luxury car kills 2 Sikhs on the tree

அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி

அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி
அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், 2 சீக்கியர்கள் பலியாயினர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் நகருக்கு அருகேயுள்ள பிஷர்ஸ் நகரில் வசித்து வந்தவர்கள் வருண்தீப் (வயது 19), தவ்னீத் சாஹல் (22), குர்ஜோத் சந்து (20). இவர்கள், இந்திய வம்சாவளி சீக்கியர்கள். இவர்கள் 3 பேரும் அங்கு சொகுசு காரில் கடந்த புதன்கிழமையன்று பயணம் செய்தனர். அப்போது அந்த கார் திடீரென ஓட்டியவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி அங்கு இருந்த ஒரு மரத்தின் மீது மோதியது.


இதில் வருண்தீப்பும், தவ்னீத் சாஹலும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். குர்ஜோத் சந்து படுகாயம் அடைந்தார்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த குர்ஜோத் சந்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்துக்குள்ளான காரை ஓட்டிச்சென்ற தவ்னீத் சாஹல், இருக்கை ‘பெல்ட்’ அணியவில்லை என போலீசார் கூறினர்.

விபத்தில் 2 சீக்கியர்கள் பலியானது அங்குள்ள சீக்கிய சமூகத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 311 இந்தியர்கள் நாடு கடத்தல் - டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்.
2. சிரியா எல்லையில் தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு
சிரியாவில் குர்திஷ் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான துருக்கியின் ராணுவ தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
3. அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வி - வடகொரியா தகவல்
அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
4. அமெரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.
5. அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை
அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொல்லப்பட்டார்.