உலக செய்திகள்

பாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு தள்ளுபடி தரும் சீக்கிய வியாபாரி + "||" + Religious harmony in Pakistan, to Muslims, Sikhs dealer rebate offer

பாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு தள்ளுபடி தரும் சீக்கிய வியாபாரி

பாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு தள்ளுபடி தரும் சீக்கிய வியாபாரி
பாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேணுவதற்காக, சீக்கிய வியாபாரி ஒருவர் முஸ்லிம்களுக்கு தனது விற்பனையில் தள்ளுபடி கொடுத்து வருகிறார்.
பெஷாவர்,

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணம், ஜாம்ருத் பகுதியில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையை இந்திய வம்சாவளி சீக்கியர் நரஞ்ச் சிங் திறந்து நடத்தி வருகிறார்.

இவர் முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை சீக்கிய மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பேணவும், வளர்க்கவும் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், தன் கடையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்களுக்கு தள்ளுபடி விலையில் உணவுப்பொருட்கள் வழங்க முடிவு செய்து, அதை மேற்கொண்டுள்ளார். இது அங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


அரசாங்கத்தின் விலை கட்டுப்பாட்டு குழு நிர்ணயம் செய்துள்ள விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு இவர் உணவு பொருட்களை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து வருகிறார். குறிப்பாக உணவுப்பொருட்களை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை குறைவான விலையில் இவர் விற்பனை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்தது தவறு -இம்ரான்கான்
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இணைந்தது மிகப்பெரிய தவறு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.
2. ”மோடி-டிரம்ப் உரையாற்றிய ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் வரவில்லை” -பாகிஸ்தான் மந்திரியின் வயிற்றெரிச்சல் விமர்சனம்
மோடி-டிரம்ப் உரையாற்றிய ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் வரவில்லை என்று வயிற்றெரிச்சலில் பாகிஸ்தான் மந்திரி விமர்சித்துள்ளார்.
3. பாகிஸ்தானில் கோர விபத்து: மலையில் பஸ் மோதி 26 பேர் சாவு
பாகிஸ்தானில் மலையில் பஸ் மோதிய கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
4. ”விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது” பாகிஸ்தான் குறித்து ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் குற்றச்சாட்டு
விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது அவர்கள் தரக்குறைவாக நிற்கும்போது நாம் உயருவோம் என பாகிஸ்தான் குறித்து ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் சையது அக்பருதீன் கூறினார்.
5. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு
பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.