உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 18 May 2019 10:15 PM GMT (Updated: 18 May 2019 7:21 PM GMT)

இந்தோனேசியாவில் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.


* கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து அலுமினியம், இரும்பு இறக்குமதிக்கு விதித்து வந்த வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விலக்கி கொண்டு விட்டார்.

* இந்தோனேசியாவில் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. சீனாவின் ஜிலின் மாகாணத்திலும் நில நடுக்கம் (5.1 புள்ளி) ஏற்பட்டது. பப்புவா நியூகினியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கங்களால் பாதிப்பு உண்டா என்பது பற்றி தகவல் இல்லை.

* வங்காள தேசத்தில் பாகர்ஹாட்-மாவா நெடுஞ்சாலையில் ஒரு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

* துபாயில் கேரளாவை சேர்ந்த முஸ்லிம் அமைப்பு ஒன்று தினந்தோறும் 2 ஆயிரத்து 500 பேருக்கு ‘இப்தார்’ விருந்து அளித்து வருகிறது.

* கம்போடியா நாட்டில் 86.7 சதவீதம் பேர் இணையதள வசதியைப் பெற்று, பயன்படுத்துவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

* அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் 30-ந்தேதி கனடா செல்கிறார். அவர் அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.


Next Story