உலக செய்திகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார் + "||" + Action Against Terrorism: India is ready to help Sri Lanka

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு, இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார் என தெரிவித்துள்ளது.
கொழும்பு,

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் மனித குண்டுகள் வெடித்ததில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் தரன்ஜித்சிங் சாந்து கண்டியில் 2 உயர் புத்த துறவிகளை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


இந்திய தூதர் மதிப்புக்குரிய மகாநாயகே தெரோஸ் உடன் சந்தித்து பாதுகாப்பு நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.