உலக செய்திகள்

இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு + "||" + Gotabhaya Rajapaksa decided to contest the presidential election in Sri Lanka

இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு

இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு
இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
கொழும்பு,

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்கா என இரட்டை குடியுரிமையை வைத்துக்கொண்டு கோத்தபய ராஜபக்சே அரசியலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தன்னுடைய அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இது குறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில், “நான் நீண்ட காலமாக யோசித்து அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுக்கு செய்துள்ளேன். அதனால் தான் என்னுடைய அமெரிக்க குடியுரிமையையும் விட்டு கொடுத்து விட்டேன். இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தேர்தலில் எனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள மாட்டேன். தேர்தலுக்கும், அதற்கும் சம்பந்தம் கிடையாது. அந்த சம்பவம் என்னை மிகவும் கவலை அடைய செய்தது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கர்டினல் ரஞ்சித்
இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கர்டினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
2. மாநில சீனியர் தடகள போட்டி செயிண்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன்
திருச்சியில் நடந்த மாநில சீனியர் தடகள போட்டியில் செயிண்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2-ம் இடத்தை பிடித்தது.
3. இலங்கையின் தற்போதைய நிலைக்கு அதிபரின் அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம் - சிறிசேனா குற்றச்சாட்டு
இலங்கையின் தற்போதைய நிலைக்கு, அதிபரின் அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம் என சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.
4. திருச்சியில் மாநில சீனியர் தடகள போட்டி 1,450 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
திருச்சியில் மாநில சீனியர் தடகள போட்டி நடந்தது. இதில் 1,450 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
5. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: குமரி வாலிபரிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை பரபரப்பு தகவல்கள்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குமரி வாலிபரிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் புதிதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.