உலக செய்திகள்

‘நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை + "||" + "I will show you how to raise money for the country" - Prime Minister of Imran Khan

‘நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை

‘நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை
நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெஷாவரில் உள்ள கவர்னர் இல்லத்தில் பழங்குடி மாவட்டங்களின் பிரதிநிதிகளை பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.


அப்போது அவர் கூறுகையில், “நாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன். நாட்டை வழிநடத்துவதற்கான பணத்தை நாட்டிடம் இருந்தே வசூலிப்பேன்” என சூளுரைத்தார்.

ஓராண்டு காலத்துக்கு மேலாக பழங்குடியினர் மாவட்டங்களில் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் செயல்பாட்டில் இல்லாதபோதும், அங்கெல்லாம் அமைதியை பராமரித்து வந்ததற்கு அந்த மக்களுக்கு பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், பழங்குடியினர் மாவட்டங்களில் பழங்குடி இன மக்களின் கலாசாரம், பாரம்பரியம் அடிப்படையில் புதிய சட்டங்களும், நிர்வாக முறையும் அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.