இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல் ஹக் நியமனம்


இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல் ஹக் நியமனம்
x
தினத்தந்தி 21 May 2019 5:34 AM GMT (Updated: 21 May 2019 5:58 AM GMT)

இந்தியாவுக்கான தனது தூதராக மொய்ன் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் நியமித்துள்ளது.

இஸ்லாமாபாத்

இதுவரை அப்பகுதியில் இருந்த சொகைல் முகமதுவை தனது வெளியுறவுச் செயலாளராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நியமித்துள்ளார். இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 20க்கும் மேற்பட்ட புதிய அதிகாரிகளை நியமித்தும் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள மொய்ன் உல் ஹக், தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வருகிறார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாலும், இந்தியாவில் பொறுப்பேற்க இருக்கும் புதிய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய காரணத்தினாலும் மொய்ன் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, 18 தூதர்கள் மற்றும் துணைத் தூதரக உறுப்பினர்கள்  நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக  அறிவித்து உள்ளார்.  இதில் ஐந்து பெண்கள் மற்றும் ஓய்வு பெற்ற 2 தளபதிகளும் அடங்குவர்.

Next Story