உலக செய்திகள்

அமெரிக்காவில் கடற்படை விமானம், விபத்தில் சிக்கியது + "||" + In the United States Navy aircraft met with an accident

அமெரிக்காவில் கடற்படை விமானம், விபத்தில் சிக்கியது

அமெரிக்காவில் கடற்படை விமானம், விபத்தில் சிக்கியது
அமெரிக்க கடற்படை விமானம், ஏ.வி–8 பி ஹாரியர். இந்த விமானம், அங்கு வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள செர்ரி பாயிண்ட் கடற்படை விமான தளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.

வாஷிங்டன், 

ஏ.வி–8 பி ஹாரியர்  விமானம், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.

அவர் நியூபெர்ன் நகரில் உள்ள கரோலினா கிழக்கு மருத்துவ மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் உள்ளூர்வாசிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை.

சம்பவ இடத்தை ராணுவம் சுற்றி வளைத்து விசாரணை நடத்துகிறது. விபத்துக்கான காரணம், உடனடியாக தெரியவரவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் - ஆயுத கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்க செய்தது
ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதலை நடத்தி அந்நாட்டின் ஆயுத கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்க செய்தது.
2. வாடிப்பட்டி அருகே இருவேறு விபத்து; 14 பேர் படுகாயம்
வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
3. பரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம்
பரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
4. வெவ்வேறு விபத்துகளில், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி
முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...