உலக செய்திகள்

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : 10 பேர் பலி + "||" + Gunfire in Mexico : 10 people killed

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : 10 பேர் பலி

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : 10 பேர் பலி
மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானார்கள்.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் ஒரே நேரத்தில் 4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதேபோன்று டாமாவ்லிபாஸ் நகரில் 2 குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் உள்ளூர் தாதா கும்பலை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வேப்பூர் அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு; நண்பர்களுடன் குளித்த போது சோகம்
வேப்பூர் அருகே நண்பர்களுடன் குளித்த போது கிணற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
2. திருப்போரூர் அருகே லாரி மோதி சிறுவன் பலி; தந்தை கண் எதிரே பரிதாபம்
திருப்போரூர் அருகே தந்தை கண்எதிரே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி 13 வயது சிறுவன் பலியானான்.
3. தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது; பெண் பலி
சென்னை நெற்குன்றத்தில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது. இதில் பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. க.பரமத்தி அருகே பால தடுப்பு சுவரில் கார் மோதியதில் பாட்டி-பேரன் பலி 3 பேர் படுகாயம்
க.பரமத்தி அருகே பால தடுப்பு சுவரில் கார் மோதியதில் பாட்டி-பேரன் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. காஞ்சீபுரம் அருகே சுவரில் கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி; காரில் இருந்த ரூ.69¾ லட்சத்தை பத்திரமாக ஒப்படைத்த போலீசார்
காஞ்சீபுரம் அருகே சுவரில் கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலியானார். விபத்தில் சிக்கிய காரில் இருந்த ரூ.69¾ லட்சத்தை பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...