அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்: ஹூவாய் நிறுவனம்


அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்: ஹூவாய் நிறுவனம்
x
தினத்தந்தி 22 May 2019 3:49 AM GMT (Updated: 22 May 2019 10:24 AM GMT)

அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.



தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கடந்த வாரம் சீன நிறுவனமான ஹூவாய் உட்பட சில வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா வர்த்தக தடை விதித்தது. இதனையடுத்து ஹூவாய் போன்களில் கூகுளின் அப்டேட்களும், சில செயலிகளும் செயல்படாது என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.

ஆண்டிராய்ட் பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் சேவைகள் இல்லையென்றால் ஹூவாய் நிறுவனம் கடும் பாதிப்படையும் என்று கூறப்பட்ட நிலையில், அவை இல்லாமலேயே சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்றும், இதனால் தங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் ஹூவாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹுவாய்  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சென் செங்ஃபெய்  ஊடகங்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அளித்த பேட்டியில் கூறியதாவது:- “அமெரிக்காவிடமிருந்து உட்பொருள் கட்டுப்பாட்டை ஓராண்டுக்கு முன்பு நாங்கள் பெற்றோம். ஹுவாய் 5ஜி தொழில்நுட்பத்தின் செயல்திறன் மீது நம்பிக்கை உண்டு. கட்டுப்பாடுகள் எதுவும் ஹுவாய்யின் 5ஜியைக் கட்டுப்படுத்திவிட முடியாது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு வேறெந்த நிறுவனங்களாலும் ஹுவாய்யின் 5ஜி தொழில்நுட்பத்தை அடைய முடியாது என்று ஊகிக்கிறேன் என்றார்.

Next Story