உலக செய்திகள்

எல்லைக்குள் பறந்த ரஷ்ய குண்டு வீசும் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா + "||" + US intercepts Russian bombers, fighter jets off the coast of Alaska

எல்லைக்குள் பறந்த ரஷ்ய குண்டு வீசும் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா

எல்லைக்குள் பறந்த ரஷ்ய குண்டு வீசும் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா
ரஷ்யாவின் போர் விமானங்களை அலாஸ்கா அருகே இடைமறித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண  வான்பரப்புக்கு அருகே ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் பறந்ததாக  அமெரிக்காவின் வடக்கு வான் பாதுகாப்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது. அந்த 6 போர் விமானங்களில், குண்டு வீசும் திறன் கொண்ட டியூ-95 மற்றும் சுகோய் 35 ரக போர் விமானங்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அவற்றை, தங்கள் நாட்டின் எப்-22 விமானங்கள் மூலம் இடைமறித்து திருப்பி அனுப்பியதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அச்சுறுத்தலை கண்டுபிடிக்கவும் முறியடிக்கவும் 365 நாட்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வைரலான ”கோடீஸ்வர பிச்சைக்காரி”
லெபனானை சேர்ந்த பிச்சை எடுக்கும் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.6 கோடியே 37 லட்சம் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. ஊழலில் ஈடுபட்ட அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல்
ஊழலில் ஈடுபட்ட அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
3. ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய அதிபர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை
ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய ஹோண்டுராஸ் முன்னாள் அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4. வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.85 லட்சம்: ஜாலியாக செலவு செய்த தம்பதி
வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்ச ரூபாயை செலவு செய்ததால் தம்பதி, வழக்கை சந்தித்து வருகின்றனர்.
5. ஒரு ரூபாய்க்கு துணி விற்பனை... ஐந்தே நிமிடங்களில் கடையை காலி செய்த பெண்கள் கூட்டம்
ரஷ்யாவில் ஒரு ரூபாய் என்ற மதிப்பில் துணிகளை விற்பதாக அறிவித்த ஐந்தே நிமிடங்களில் பெண்கள் கூட்டம் கடையை காலி செய்ததோடு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கொண்டனர்.