உலக செய்திகள்

கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது + "||" + Chinese engineer arrested after dropping worker in boiler

கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது

கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் சகியான்வாலா என்ற இடத்தில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கமான பணிகள் நடந்துகொண்டிருந்தன. சீனாவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் மேற்பார்வை பணியை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அவர் செகரோஸ் என்ற தொழிலாளியிடம் குறிப்பிட்ட சில பணிகளை செய்யும்படி கூறினார். ஆனால் செகரோஸ் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அவரை அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சீன என்ஜினீயர், 3 அடி உயரம் கொண்ட கொதிகலனுக்குள் செகரோசை தள்ளிவிட்டார். இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து, செகரோசை போலீசார் கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4–வது திருமணம் செய்ய முயன்றவர் கைது
சென்னை சாலி கிராமத்தில் 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4–வது திருமணம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
2. தங்கநகை சேமிப்பு திட்டம் நடத்தி ரூ.2 கோடி மோசடி தனியார் நிறுவன உரிமையாளர் கைது
தங்கநகை சேமிப்பு திட்டம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.
3. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை; கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 600 பேர் கைது
குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி, காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்; 31 பேர் கைது
வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் நள்ளிரவில் போலீசார் நடத்திய வேட்டையின் போது மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.