உலக செய்திகள்

தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு: இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம் + "||" + The allegation of abuse in the election: The Struggle in Indonesia

தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு: இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம்

தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு: இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம்
இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

ஜகார்த்தா, 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகின் 3–வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் அந்நாட்டின் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் 3 தேர்தல்களும் கடந்த மாதம் 17–ந் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதில் 55.5 சதவீத ஓட்டுகளை பெற்று தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபின்யான்டோ 10 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் இந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக பிரபோவோ சுபின்யான்டோ குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபோவோ ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் ஜகார்த்தா உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர்.

அதனை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர். அப்போதும், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நமது அன்பான நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை நான் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டேன். சட்டத்தை மீறுபவர்கள் மீது போலீஸ் மற்றும் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை’’ என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் ஓட்டேரியில் குப்பைகளுக்கு தீவைக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; பலி எண்ணிக்கை 93 ஆக உயர்வு
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்து உள்ளது.
3. 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடுகோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
4. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில், இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டம்
கோவில் சொத்துகளை மீட்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு
குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...