உலக செய்திகள்

இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது : அமெரிக்கா கருத்து + "||" + The Indian election has been honest: America's opinion

இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது : அமெரிக்கா கருத்து

இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது : அமெரிக்கா கருத்து
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதையொட்டி இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் இருந்து நான் கூறுவது என்னவென்றால், இந்திய தேர்தல்களின் நேர்மையில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்’’ என்றார்.

மேலும் அவர், ‘‘மற்ற நாடுகளுக்கு அனுப்புவது போல் இந்தியாவுக்கு தேர்தல் பார்வையாளர்களை நாங்கள் அனுப்புவதில்லை. ஏனெனில் இந்தியத் தேர்தல் ஆணையம் மிகவும் சுதந்திரமாகச் செயல்படுகிறது. நாங்கள் இந்திய அரசுடன் வலுவான உறவுகளை வைத்திருக்கிறோம். அனைத்து விவகாரங்களிலும் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்’’ என கூறினார்.

அத்துடன், ‘‘மனித வரலாற்றிலேயே ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக இந்திய தேர்தல் விளங்குவதாக சிலர் என்னிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புத திருவிழாவை மக்கள் அமைதியுடன் நடத்திக் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக இந்திய மக்களை நாங்கள் பாராட்டுகிறோம்’’ எனவும் அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா
இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
2. அமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக போர் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் - ஜி20 நாடுகள் கூட்டத்தில் அறிக்கை
அமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக போர், உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்று ஜி20 மாநாட்டில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
3. நிபந்தனை இன்றி ஈரானுடன் பேச தயார்: அமெரிக்கா தகவல், ஈரான் நிராகரிப்பு
நிபந்தனை இன்றி ஈரானுடன் பேச தயார் என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், அமெரிக்கா வார்த்தை ஜாலம் காட்டுவதாக கூறி ஈரான் நிராகரித்துள்ளது.
4. அமெரிக்காவுடன் போர் என்பது மிகவும் பேரழிவாக இருக்கும் - சீனா பாதுகாப்புத்துறை மந்திரி
அமெரிக்காவுடன் போர் என்பது மிகவும் பேரழிவாக இருக்கும் என சீன பாதுகாப்புத்துறை மந்திரி கூறியுள்ளார்.
5. அமெரிக்காவில் பயங்கரம்: கடற்கரை நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி - தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் வெர்ஜீனியா கடற்கரை நகரத்தில் நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச்சூட்டில் குண்டுபாய்ந்து 12 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர், போலீஸ் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.