நேபாளத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி உள்பட 4 பேர் கைது


நேபாளத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 May 2019 11:45 PM GMT (Updated: 25 May 2019 7:08 PM GMT)

நேபாளத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி உள்பட 4 பேர் கைது. அவர்களிடம் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7.5 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

காத்மாண்டு,

இந்திய உளவுத்துறை நேபாள நாட்டு போலீசாருக்கு அளித்த எச்சரிக்கையின் பேரில் காத்மாண்டு விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி யூனுஸ் அன்சாரி மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முகமது நசுருதீன், முகமது அதார், நாடியா ஆம்பர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த 3 சூட்கேஸ்களை சோதனை செய்தபோது அதில் ரூ.7.5 கோடிக்கு இந்தியாவின் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஐ.எஸ்.ஐ. இயக்கத்தின் உத்தரவின்பேரில் அவர்கள் இந்த கள்ளநோட்டுகளை இந்தியாவுக்கு கடத்த முயன்றதாக தெரிகிறது. யூனுஸ் அன்சாரி நேபாளத்தின் முன்னாள் மந்திரி சலீம் அன்சாரி என்பவரின் மகன் ஆவார். இருவரும் தாவூதுக்கு நெருங்கியவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story