உலக செய்திகள்

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு + "||" + Magnitude-8 earthquake strikes north-central Peru

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு
பெரு நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
பெரு நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் ஆனது லகுனாஸ் என்ற கிராமத்தின் தென்கிழக்கே 80 கி.மீட்டர் தொலைவிலும், யூரிமேகுவாஸ் என்ற பெரிய நகரத்தின் வடகிழக்கே 158 கி.மீட்டர் தொலைவிலும், 114 கி.மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளது.

இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  பெரு நாட்டு அரசாங்கத்தின் அவசரகால துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தலைநகர் லிமா மற்றும் கல்லாவோ நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது 7.2 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.