நைஜீரியாவில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு பயங்கரவாதிகள் அட்டூழியம்


நைஜீரியாவில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு பயங்கரவாதிகள் அட்டூழியம்
x
தினத்தந்தி 26 May 2019 9:45 PM GMT (Updated: 26 May 2019 6:44 PM GMT)

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அபுஜா, 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதோடு, அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போகோ ஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த போர்னோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த போகோஹரம் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் பயங்கர தாக்குதலை நடத்தினர். ராணுவவீரர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் இந்த நாசவேலையை அரங்கேற்றிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த கொடூர தாக்குதலில் 25 ராணுவவீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பொது மக்கள் பலரும் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

Next Story