உலக செய்திகள்

”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் + "||" + 'Very smart' Kim knows N Korea must give up nukes: Trump

”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
டோக்கியோ,

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான சந்திப்புக்கு பிறகு அந்நாட்டுடன் மோதல் போக்கை வடகொரியா  அதிபர் கிம் ஜாங் அன் கைவிட்டார். அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளையும் கைவிட்ட கிம் ஜாங் அன், மென்மையான போக்கை கடைபிடித்தது உலக நாடுகள் மத்தியில் வடகொரியா மீதான பார்வையை மாற்றத் தொடங்கியது. 

இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ந் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருதரப்பு உறவில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும், ஏவுகணை சோதனையை வடகொரியா துவங்கியிருக்கிறது. 

இந்த நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் சாதுர்யமானவர் என்றும் தனது நாட்டை மேம்படுத்த, அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்பதை அவர் அறிந்து இருப்பார்" என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. பெண் எம்.பி.க்கள் குறித்து இனவெறி கருத்து: டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள் குறித்து இனவெறி கருத்து கூறிய விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார்: டிரம்ப் திடீர் அறிவிப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3. பிரச்சினைக்கு தீர்வுகாண ஈரானுக்கு காலக்கெடு இல்லை - டொனால்டு டிரம்ப்
பிரச்சினைக்கு தீர்வுகாண ஈரானுக்கு காலக்கெடு இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
4. தேர்தலில் தலையீடாதீர்கள் புதினிடம் கிண்டலாக தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
இனி அமெரிக்க தேர்தலில் தலையீடாதீர்கள் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார்.
5. அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்
அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிக வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.