உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 27 May 2019 10:15 PM GMT (Updated: 27 May 2019 9:44 PM GMT)

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கமசட்கா தீபகற்பத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


* வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், மிகவும் புத்திசாலியானவர் என்றும், தன் நாட்டின் வளர்ச்சிக்கு அணு ஆயுதங்களை கைவிடவேண்டியது அவசியம் என்பது அவருக்கு தெரியும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கமசட்கா தீபகற்பத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் அண்மையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பொருளாதார நிபுணரான கீதனாஸ் நவ்சேடா 69 சதவீத வாக்குகளை குவித்து வெற்றி பெற்றார்.

* ஏமனின் தாயிஸ் நகரில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள மாவியா என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 7 குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் பரான் மாகாணத்தில் பாலா புலுக் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 10 ராணுவ வீரர்களும், 4 போலீஸ் அதிகாரிகளும் பலியாகினர்.

Next Story