நைஜீரியா நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக முகம்மது புஹாரி பதவியேற்பு


நைஜீரியா நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக முகம்மது புஹாரி பதவியேற்பு
x
தினத்தந்தி 29 May 2019 5:22 PM GMT (Updated: 29 May 2019 5:22 PM GMT)

நைஜீரியா நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக முகம்மது புஹாரி பதவியேற்றுக் கொண்டார்.

அபுஜா,

நைஜீரியா நாட்டின் பாராளுமன்றத்தின் 360 கீழ்சபை மற்றும் 109 மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும், அதிபர் பதவிக்கும் சேர்த்து கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு மட்டும் 73 பேர் போட்டியிட்டனர்.
 
தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் சுமார் ஒன்றரை கோடி (56 சதவீதம்) வாக்குகளை பெற்று தற்போதையை அதிபர் முகம்மது புஹாரி மீண்டும் வெற்றி பெற்றார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக நைஜீரியா அதிபராக முகம்மது புஹாரி இன்று பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் அதிபருமான மஹ்மூத் யாக்குபு சுமார் ஒருகோடியே 13 லட்சம் வாக்குகளை (41சதவீதம்) பெற்று தோல்வியை தழுவினார்.

Next Story