உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 29 May 2019 10:15 PM GMT (Updated: 29 May 2019 8:56 PM GMT)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.


* ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து தலைநகர் கான்பெராவில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், கவர்னர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்காட் மாரிசன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார்.

* நைஜீரியாவின் சாம்பாரா மாகாணத்தில் உள்ள துங்கா என்ற கிராமத்துக்குள் ஆயுதம் ஏந்திய குழுக்கள் புகுந்து, பயங்கர தாக்குதல் நடத்தின. இதில் கிராம வாசிகள் 23 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

* சீனாவின் வரலாற்று சின்னமான சீன பெருஞ்சுவரை பாதுகாக்கும் வகையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 65 ஆயிரம் பேர் மட்டுமே சீன பெருஞ்சுவரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் இணைய மோசடியில் ஈடுபட்டு பல கோடி ரூபாயை சுருட்டியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.

* தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. எந்த வித ஆதாரமும் இல்லாமல் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நீக்க வலியுறுத்தி அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story