அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி: 18-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி: 18-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்
x
தினத்தந்தி 1 Jun 2019 11:15 PM GMT (Updated: 1 Jun 2019 7:56 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக, 18-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற நாளில் இருந்து, 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று டிரம்ப் (வயது 72) கூறி வருகிறார்.ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியில் ஜோ பிடென் உள்ளிட்ட பல தலைவர்கள் உள்ளனர். இந்த நிலையில், தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக 18-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த புளோரிடா மாகாணத்தின் ஆர்லண்டோ நகரில் 18-ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் டிரம்ப் மனைவி மெலனியாவுடன் கலந்து கொள்கிறார். துணை ஜனாதிபதி மைக் பென்சும் மனைவி கரேனும் பங்கேற்கிறார். இதையொட்டி டுவிட்டரில் டிரம்ப் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நான் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை ஆர்லண்டோவில் ஜூன் 18-ந்தேதி அறிவிக்கிறேன். இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story