உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி + "||" + Four dead in northern Australia shooting

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் அமைந்த டார்வின் நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  2 பேர் காயமடைந்தனர்.  துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 45 வயது நபரை பிடித்து போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் பற்றி சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சியான ஒருவர் கூறும்பொழுது, டார்வின் ஓட்டலுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர், ஓட்டலின் அனைத்து அறைகளிலும் சுட்டு கொண்டே சென்றார்.  ஒவ்வொரு அறையாக சென்று அங்கு யாரேனும் இருக்கிறார்களா என பார்த்து, அங்கிருந்த அனைவரையும் சுட்டார்.

இதன்பின் வேகமுடன் ஓட்டலில் இருந்து வெளியேறிய அந்நபர், தன்னுடைய டொயோட்டா வேனுக்குள் துள்ளி குதித்து அங்கிருந்து தப்பி சென்றார் என கூறினார்.  இதேபோன்று மற்றொரு பெண் சாட்சி, அதே ஓட்டலில் இருந்து தோல் முழுவதும் துளையுடன் காணப்பட்ட பெண் ஒருவரை அவரது காதலர் தூக்கி கொண்டு வெளியே ஓடினார்.  ரத்தம் வழிந்த அந்த பெண்ணுக்கு நான் உதவி செய்தேன் என கூறினார்.

இதுபற்றி அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் லண்டன் நகரில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இது தீவிரவாத தொடர்புடைய தாக்குதல் அல்ல என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க சலூனில் துப்பாக்கி சூடு: 5 பேர் காயம்
அமெரிக்க சலூனில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் காயமடைந்தனர்.
2. ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பாரதி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கொத்தமங்கலம் வாடிமாநகரில் ஓட்டல் நடத்தி வந்தார்.
3. தொழிலாளி அடித்துக்கொலை; சிறுவன் உள்பட 5 பேர் கைது
ஜெயங்கொண்டம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. பெங்களூரில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு
பெங்களூரில் போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.
5. மும்பையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம்; தாயை கொன்று உடலை வெட்டி வீசிய மகன் கைது
உடல் பாகங்கள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக பெற்ற தாயை கொலை செய்ததாக அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர செயல் குறித்த நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.