உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 4 Jun 2019 10:45 PM GMT (Updated: 4 Jun 2019 7:15 PM GMT)

ஜப்பானின் தொரிஸ்கிமா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.


* ஜப்பானின் தொரிஸ்கிமா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடிபெயர்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் படும் பொருட்களுக்கு வரும் 10-ந் தேதி முதல் 5 சதவீத வரி விதிக்கப்படும் என்று அண்மையில் அறிவித்தார். ஒரு வாரத்திற்குள் வரி விதிப்பு அமலுக்கு வர இருப்பதை அடுத்து, மெக்சிகோ வெளியுறவு மந்திரி மார்சிலோ எப்ரார்ட் தலைமையிலான குழுவினர், அமெரிக்க பிரதிநிதிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

* ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள டார்வின் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். தாக்குதல் நடத்திய 45 வயதான நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story