இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மாசுபாட்டின் உணர்வு இல்லை - டிரம்ப் கோபம்


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
x
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
தினத்தந்தி 6 Jun 2019 7:38 AM GMT (Updated: 6 Jun 2019 11:23 AM GMT)

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை மாசு கட்டுப்பாட்டில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்கா 'தூய்மையான காலநிலைகளில்' ஒன்றாக உள்ளது என்று வலியுறுத்தினார்.

வாஷிங்டன்,

இங்கிலாந்தில் டிரம்ப் தன்னுடைய மூன்று நாள் பயணத்தின் போது  கடைசி நாளில் ஐ.டி.வி. உடனான ஒரு பேட்டியின் போது,  இங்கிலாந்தின் இளவரசர் சார்லசுடன் அவரது சந்திப்பு பற்றி கேட்டபோது இந்த  கருத்தை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது;

"நான் சொல்கிறேன், அமெரிக்கா  அனைத்து புள்ளிவிவரங்களையும் அடிப்படையாகக் கொண்டு  இப்போதும் சுத்தமான காலநிலையில்தான் உள்ளது. அது நல்லதுதான், ஏனென்றால் சிறந்த நீர், தூய்மையான தண்ணீர் வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு  மாசுபாடு மற்றும் தூய்மை  குறித்த உணர்வு இல்லை.

சீனா, இந்தியா, ரஷ்யா உள்பட பல நாடுகளில் அவர்களுக்கு நல்ல காற்று இல்லை, நல்ல தண்ணீர் இல்லை மற்றும் மாசுபாடு உணர்வு குறைவு. நீங்கள் சில நகரங்களுக்குச் சென்றால் ... நீங்கள் மூச்சு விட முடியாது. அவர்களின்  பொறுப்பை அவர்கள் செய்யவில்லை என கூறினார்.

"காலநிலை மாற்றம்" ட்ரம்பிற்கும், பிரதமர் மோடிக்கும்  இடையேயான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்திய பயணத்திற்கு முன்பாக அவர் கோரிக்கைகளை பிரதிபலிக்கிறார்.

Next Story