உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 6 Jun 2019 10:00 PM GMT (Updated: 6 Jun 2019 6:45 PM GMT)

* நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காவ்கியா நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

* மெக்சிகோவின் ரோஸ்வெல் நகரில் வெடிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் திடீரென வெடித்து சிதறின. இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் 179 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில் சமூக ஜனநாயக கட்சி 91 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. 41 வயதான மெட்டி பிரெடரிக்சென் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் முதல் இளம் டென்மார்க் பிரதமர் என்கிற பெருமையை அடைந்துள்ளார்.

* மெக்சிகோ உடனான பேச்சுவார்த்தை போதிய திருப்தி அளிக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் வரி உயர்வு கட்டாயம் நிகழும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Next Story