ரஷியா மற்றும் அமெரிக்கா போர் கப்பல்கள் சந்திக்க இருந்த பெரும் விபத்து தவிர்ப்பு


ரஷியா மற்றும் அமெரிக்கா போர் கப்பல்கள் சந்திக்க இருந்த பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 7 Jun 2019 5:58 PM GMT (Updated: 7 Jun 2019 5:58 PM GMT)

ரஷியா மற்றும் அமெரிக்கா கடற்படையின் போர் கப்பல்கள் சந்திக்க இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மாஸ்கோ,

கிழக்கு சீனக் கடலில் இன்று ரஷியா மற்றும் அமெரிக்கா கடற்படையின் போர் கப்பல்கள் மோதலுக்கு உள்ளாக இருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

ரஷியா கடற்படையை சேர்ந்த மிகப்பெரிய போர் கப்பல் இன்று காலை கிழக்கு சீனா கடல் பகுதி வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தது. அதே பாதையில் நேர் கோட்டில் அமெரிக்க கடற்படையை சேர்ந்த விமானம் தாங்கி போர் கப்பலும் சென்றது.

சற்று நேரத்தில் தனது பாதையை மாற்றிக்கொண்ட அமெரிக்காவின் போர் கப்பல் சுமார் 50 மீட்டர் தூரத்தில் திடீரென்று ரஷியா போர் கப்பலின் குறுக்கே திரும்பியது. இதை கவனித்து விட்ட ரஷியா போர் கப்பலின் மாலுமி தனது கப்பலின் பாதையை உடனடியாக மாற்றினார். இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவின் ஏழாவது கடற்படை தளபதி கிளேட்டன் தாஸ் கூறுகையில், “யு.எஸ்.எஸ். சான்சிலர்வில்லி போர்க்கப்பலுக்கு எதிராக, ரஷ்யாவின் போர்க்கப்பல் பாதுகாப்பற்ற நடவடிக்கை எடுத்தது. ரஷியர்களின் செயல்பாடு பாதுகாப்பற்றதாகவும், தொழில்முறையற்றதாகவும் இருந்தது” என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த சம்பவம் கிழக்கு சீனக் கடலில் தென்கிழக்கில் நிகழ்ந்தது என்று தெரிவித்த ரஷ்ய பசிபிக் கடற்படை, அமெரிக்க போர்க்கப்பலின் தளபதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தி அனுப்பியதாகவும் கூறி உள்ளது.


Next Story