ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Jun 2019 10:45 PM GMT (Updated: 8 Jun 2019 7:45 PM GMT)

ஆப்கானிஸ்தானில் நடந்த ஆளில்லா விமான தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் பலியாகினர்.

ஜலாலாபாத்,

ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வருகிற உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்துள்ளனர். ஆங்காங்கே அவர்கள் பதுங்கி இருந்து கொண்டு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு நங்கர்ஹார் மாகாணத்தில் கோகியானி மாவட்டத்தில் வாஜிரோ டாங்கி என்ற இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது ராணுவத்துக்கு உளவு தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த ராணுவம் அதிரடியாக முடிவு எடுத்தது.

அதன்படி வாஜிரோ டாங்கியில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தில் ஆளில்லா விமானம் மூலம் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் அழிக்கப்பட்டது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் பலியாகினர்.

அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்களும், ஆயுதங்களும் அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதல் பற்றி நங்கர்ஹார் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான குணார், நூரிஸ்டான் மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்துகிற ஐ.எஸ். பயங்கரவாதிகள் வாய் திறக்கவில்லை.


Next Story