உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 9 Jun 2019 10:10 PM GMT (Updated: 9 Jun 2019 10:10 PM GMT)

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்த அழைப்பை ஏற்க முடியாது என தலீபான் பயங்கரவாதிகள் நிராகரித்து விட்டனர்.


* கனடா தலைநகர் ஒட்டவாவையொட்டிய பகுதியில் தனது மகளை தாக்குதல் கும்பல் ஒன்றிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் உள்ளூர் ‘ராப்’ இசைக் கலைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

* ஐரோப்பாவில் தேடப்படும் நபர்களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் கிறிஸ்டோபர் கியுஸ்ட் மோரே. 16 ஆண்டுகளாக போலீசுக்கு தப்பிய இவர் கடைசியில் மால்டாவில் பிடிபட்டு விட்டார். இவர் இங்கிலாந்தில் 2003-ம் ஆண்டு ஒருவரை அவரது 2 குழந்தைகள் முன்னிலையில் அடித்துக்கொன்று விட்டு தப்பியவர் ஆவார்.

* ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்த அழைப்பை ஏற்க முடியாது என தலீபான் பயங்கரவாதிகள் நிராகரித்து விட்டனர்.

* மால்டோவாவில் நாடாளுமன்ற சபாநாயகராக சோசலிஸ்டு கட்சித்தலைவர் ஜினைதா தேர்ந் தெடுக்கப்பட்டது செல்லாது, அது சட்ட விரோதமானது என அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

* பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பஸ்சும், மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதி நடந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

* நிகரகுவாவில் கடந்த ஏப்ரலில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளு மன்றம் ஏற்று, நிறைவேற்றி உள்ளது.


Next Story