உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 7:30 PM GMT)

* கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் இடைக்கால அதிபரான காசிம் ஜோமார்ட் டோகயேவ் வெற்றி பெற்றார்.

* ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் சார்சினோ மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளை பதுங்கு குழிகளை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறுவதாகவும், மாறாக எந்த ஒரு நாட்டையும் இலக்காக கொண்டு நடைபெறவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.

* இந்தோனேசியாவில் உள்ள சினாபங்க் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு அதிகபடியான சாம்பல், புகையை கக்கி வருகிறது. 2 ஆயிரத்து 460 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை சீறுவதால் அங்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எரிமலை சீற்றத்தால் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை வானத்தில் சாம்பல் புகை சூழ்ந்து உள்ளது.

Next Story