உலக செய்திகள்

ஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி + "||" + A female passenger is open the flight Emergency path at which running at the runway

ஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி

ஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு ‘பிகே 702’ என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

லண்டன்,

விமானத்தில் 40 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என நினைத்து, விமானத்தின் அவசரகால வழியை திறந்து விட்டார்.

அதனால், பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கு மிதவை விரிந்தது. விமான ஊழியர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திடீரென அவசரகால வழி திறந்ததால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

இதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

சுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு அந்த விமானம் மீண்டும் இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 2ம் உலக போரில் ஈடுபட்ட விமானம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலி
அமெரிக்காவில் 2ம் உலக போரில் ஈடுபட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
2. விமானத்தில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தம் - டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
காஷ்மீரில் நிலைமையை நேரில் பார்வையிடவும், மக்களை சந்திக்கவும் ராகுல் காந்தி தலைமையில் விமானத்தில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
3. நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது தெரியவந்ததையடுத்து விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
4. புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் - கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
நைஜீரியா விமான நிலையத்தில், புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி அடைந்தனர்.
5. கனமழையால் ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய விமானம்; பயணிகள் உயிர் தப்பினர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு மும்பை நோக்கி ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று வந்தது. அதில் 167 பயணிகள் இருந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...