உலக செய்திகள்

கேமரூனில் பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் சுட்டு கொலை + "||" + 8 separatists killed in Cameroon's restive Anglophone region

கேமரூனில் பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் சுட்டு கொலை

கேமரூனில் பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் சுட்டு கொலை
கேமரூனில் பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் அந்நாட்டு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
கேமரூன் நாட்டில் பிரிவினைவாத படைகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.  கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் ஆங்கிலம் பேசும் 2 பகுதிகளை கைப்பற்றியுள்ளோம் என அறிவித்தன.  இதனால் அந்த பகுதியில் வசித்த 4 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் அச்சமடைந்து அங்கிருந்து புலம்பெயர்ந்தனர்.

தொடர்ந்து அந்நாட்டு படை வீரர்களுக்கும், பிரிவினைவாத படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.  இந்நிலையில் சமீபத்திய சண்டையில், அந்நாட்டின் ஆங்கிலோபோன் பகுதிக்கு வடமேற்கே புய் என்ற பகுதியில் 2 பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று கேமரூன் ராணுவ உயரதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.  பல வீரர்கள் காயமடைந்து உள்ளனர் என ராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போராட்டத்துக்கு பின் முதல்முறையாக ஹாங்காங்கில் சீனப்படை வீரர்கள் குவிப்பு
ஹாங்காங்கில் போராட்டம் தொடங்கிய பின் முதன்முறையாக சீனா அங்கு தனது படைகளை குவித்துள்ளது.
2. திருச்சியில் இருந்து துணை ராணுவ படையினர் ரெயிலில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்
திருச்சியில் இருந்து துணை ராணுவ படையினர் ரெயிலில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். அவர்களை போலீசார் வழியனுப்பி வைத்தனர்.