உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 4:56 PM GMT)

* கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவில், அகதிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று பாராம் தாங்காமல் கடலில் கவிழ்ந்து, மூழ்கியது. இதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 58 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

* வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரர் கிம் ஜாங் நாம், மலேசியா தலை நகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் முகத்தில் ரசாயன பொடியை தூவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிம் ஜாங் நாம், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கு பணியாற்றி வந்ததாக அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

* துருக்கியின் டலைக்சிர் மாகாணத்தில் உள்ள தண்டிர்மா மாவட்டத்தில் பஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் ஜமால் நஷீர் தரிக்‌ஷாய் மாகாணத்தில் உள்ள தாண்ட் மாவட்டத்தில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்து சிதறியது. அந்த வழியாக காரில் சென்ற 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

* அமெரிக்காவில் தொலைபேசி வாயிலாக நூதன மோசடியில் ஈடுபட்டு முதியோர்களிடம் இருந்து பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பலுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவி புரிந்த வழக்கில் பிஷ்வஜீத் குமார் ஜா (வயது 21) என்கிற இந்தியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

Next Story