உலக செய்திகள்

அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவின் 50 சதவீத வரி விதிப்பை ஏற்க முடியாது : டிரம்ப் திட்டவட்டம் + "||" + ndia's 50 percent tax hike in American motorcycle can not accept : Trump

அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவின் 50 சதவீத வரி விதிப்பை ஏற்க முடியாது : டிரம்ப் திட்டவட்டம்

அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவின் 50 சதவீத வரி விதிப்பை ஏற்க முடியாது : டிரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு இந்தியா 50 சதவீத வரி விதிப்பதை ஏற்கவே முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

வாஷிங்டன், 

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவு நன்றாக உள்ளது. குறிப்பாக ராணுவ உறவு நன்றாக இருக்கிறது. ஆனால் வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தி அடைந்து இருக்கிறார்.

இதையொட்டி, சி.பி.எஸ். நியூஸ் டி.வி., வானொலி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:–

மோசமாக நடத்தப்படுவதற்கு நாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இந்தியாவை நீங்கள் பாருங்கள். பிரதமர் நரேந்திர மோடி எனது நல்ல நண்பர். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்?

அமெரிக்க மோட்டார் சைக்கிள் மீது 100 சதவீத வரி விதிக்கிறார்கள். ஆனால் நாம் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை.

(அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்ததை டிரம்ப் இப்படி சுட்டிக்காட்டினார். இந்தியா, இந்த மோட்டார் சைக்கிளுக்கு வரி விதிக்கக்கூடாது என்பது டிரம்பின் எதிர்பார்ப்பு.)

நாம் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்புகிறபோது அவர்கள் 100 சதவீத வரி விதித்தனர். ஆனால் அவர்கள் ஏராளமாக மோட்டார் சைக்கிள்களை தயாரித்து இங்கே அனுப்புகிறார்கள். அவற்றின் மீது நாம் வரி போடுவதில்லை.

எனவே நான் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து இதுபற்றி பேசினேன். இதை ஏற்க முடியாது என்று சொன்னேன். அந்த தொலைபேசி அழைப்பால் 50 சதவீத வரியை குறைப்பதாக மோடி கூறினார். ஆனால் இதையும் ஏற்க முடியாது, ஏனென்றால் நாம் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை என்பதை குறிப்பிட்டேன். இப்போதும் அதை ஏற்க முடியாது. அவர்கள் இதைப் பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லாரும் கொள்ளையடிக்க விரும்புகிற வங்கி போல அமெரிக்கா இருக்கிறது. இதைத்தான் அனைவரும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளால் நமக்கு 800 பில்லியன் டாலர் (சுமார் ரூ.56 லட்சம் கோடி) வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா வரி விதிப்பதில் மன்னனாக இருக்கிறது, அதிகபட்ச வரி விதிக்கிறது என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கூடலூரில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு - மற்றொருவர் படுகாயம்
கூடலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
2. ஆறுமுகநேரி அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் பரிதாப சாவு
ஆறுமுகநேரி அருகே தசரா விழாவுக்கு மாலை அணிய சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. பட்டுக்கோட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் சாவு
பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் பலியானார். காயமடைந்த மற்றொரு ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் பரிதாபமாக இறந்தார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
4. மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வேன் மோதியதில் 2 பேர் சாவு - டிரைவருக்கு வலைவீச்சு
பெரணமல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வேன் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. குளச்சல் அருகே, மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பரிதாப சாவு
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.