உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 4:52 PM GMT)

* பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள டாபா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் காமிஸ் முஜாகித் நகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து 2 ஏவுகணைகளை வீசினர். ஆனால் சவுதி அரேபிய விமானப்படை இந்த 2 ஏவுகணைகளையும் நடுவானிலேயே இடைமறித்து அழித்துவிட்டன.

* ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் இமாம் சாஹிப் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவ விமானங்கள் வீசிய குண்டு, தவறுதலாக ராணுவ தளத்தின் மீது விழுந்ததில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

* ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே 3 நாள் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது, அவர் ஈரான்-அமெரிக்கா இடையே நிலவும் பிரச்சினைக்கு தீர்வுகாண மத்தியஸ்தம் செய்யும் வகையில் ஈரான் அதிபர் ஹசன் ருஹானியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது. 

Next Story