பிரெக்சிட் குழப்பங்களையும் மீறி இங்கிலாந்தில் குவியும் முதலீடுகள் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி


பிரெக்சிட் குழப்பங்களையும் மீறி இங்கிலாந்தில் குவியும் முதலீடுகள்   ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி
x
தினத்தந்தி 13 Jun 2019 10:56 AM GMT (Updated: 13 Jun 2019 10:56 AM GMT)

பிரெக்சிட் குழப்பங்களையும் மீறி இங்கிலாந்தில் முதலீடுகள் குவிவதைக் கண்டு ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

லண்டன்

பிரெக்சிட் குழப்பங்களையும் மீறி பிரான்சும், ஜெர்மனியும் இணைந்தால் கூட எட்ட முடியாத அளவுக்கு இங்கிலாந்தில்  அந்நிய முதலீடுகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் பிரித்தானியாவின் மீது வைத்துள்ள நம்பிக்கை வளர்ந்து வரும் நிலையில், அந்நிய முதலீடுகளைப் பொருத்தவரையில், இங்கிலாந்து தொடர்ந்து ஐரோப்பாவில் முன்னிலையில் உள்ளது.

2018-ம் ஆண்டில் 1.48 ட்ரில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இங்கிலாந்து  முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது ஐரோப்பாவின் அடுத்த நிலை பெரும் பொருளாதார ஜாம்பவான்களான ஜெர்மனியையும், பிரான்சையும் விட அதிகமாகும். இதனால் அமெரிக்கா, சீனாவிற்குப் பிறகு இங்கிலாந்து  முதலீடுகளில் உலகிலேயே மூன்றாம் இடத்தில் உள்ளது. பெர்லின் 739 பில்லியன் பவுண்டுகளையும், பாரீஸ் 649 பில்லியன் பவுண்டுகளையும் மட்டுமே ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story