உலக செய்திகள்

டொனால்டு டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் கிடையாது - ஈரான் மத தலைவர் அலி காமேனி + "||" + Abe urges Rouhani to avoid escalation of Iran U.S. tensions

டொனால்டு டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் கிடையாது - ஈரான் மத தலைவர் அலி காமேனி

டொனால்டு  டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் கிடையாது -  ஈரான் மத தலைவர் அலி காமேனி
டொனால்டு டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் கிடையாது என ஈரான் மத தலைவர் அலி காமேனி கூறியுள்ளார்.
ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.

ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து. இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன. ஈரான்–அமெரிக்கா இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்து உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. இந்த நிலையில் ஈரான்–அமெரிக்கா இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாண இருநாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளது.

இதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே 3 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். தெக்ரானில் அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானியை சந்தித்தார். அதன் பின்னர் இருவரும், ஈரானில் உச்ச அதிகாரம் படைத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமேனியை சந்தித்து பேசினர். அப்போது, அவரிடம் ஈரான்–அமெரிக்கா இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்புவதாக ஷின்ஜோ அபே கூறினார். 

ஆனால் அதனை ஏற்க மறுத்த அயத்துல்லா அலி காமேனி, டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் இல்லை என கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘டிரம்ப், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தகுதியானவர் என நான் கூறமாட்டேன். என்னிடம் அவருக்கு பதில் இல்லை. நான் அவருக்கு பதில் அளிக்க மாட்டேன்’’ என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்
ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலை கொடுத்துள்ளது.
2. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்
பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
3. ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் - ஆயுத கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்க செய்தது
ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதலை நடத்தி அந்நாட்டின் ஆயுத கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்க செய்தது.
4. பரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம்
பரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
5. அமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால் ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் வாபஸ் - டிரம்ப் தடாலடி
அமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால், ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் டிரம்ப் அதனை வாபஸ் பெற்றார்.