ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள்


ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள்
x
தினத்தந்தி 13 Jun 2019 1:33 PM GMT (Updated: 13 Jun 2019 1:33 PM GMT)

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

துபாய்,

ஓமான் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.  பெட்ரோ கெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற  கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னொரு எண்ணெய் கப்பல்  மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக  ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.  கப்பல்கள் மீது தீ பிடித்ததும், அதில் இருந்த சிப்பந்திகள் 44 பேரும் மீட்கப்பட்டனர்.  

கடந்த மாதம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்குட்பட்ட  கடற்பரப்பில் நான்கு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டிவரும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளையில்  இந்த தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் எண்ணெய் விலைகள் நான்கு  சதவீதம் அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பல்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு புகை கிளம்பும் காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பாகின.

Next Story