உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு + "||" + Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin hold delegation level talks.

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பிஷ்கேக்,

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்  பங்கேற்க பிரதமர் மோடி  கிர்கிஷ்தான் சென்றுள்ளார்.

இந்த மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார்.  உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.  பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக தெரிகிறது.  அமேதியில், ரஷ்யா துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க உள்ளதையடுத்து,  புதினிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா உள்பட 8 நாடுகள் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன. முன்னதாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கையும் சந்தித்தது கவனிக்கத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது: சீனா சொல்கிறது
அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம், இந்தியா தலையிடக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
2. எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் -துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை
விரைவில் எஸ் 400 ரக ஏவுகணைகள் விரைவில் துருக்கியை சென்றடையும் என ரஷ்யா தெரிவித்துள்ளதை அடுத்து எதிர்மறையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க எச்சரித்துள்ளது.
3. வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர டிரம்ப்- ஜி ஜிங்பிங் ஒப்புதல்
வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
4. சீனாவில் இரும்பு கடையில் தீ விபத்து - 6 பேர் உடல் கருகி சாவு
சீனாவில் இரும்பு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாயினர்.
5. உலகைச் சுற்றி...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.