உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* அகதிகள் வருகையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்க ஆயுத படைகளை ஒருபோதும் தங்களது பிராந்தியத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என மெக்சிகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
* ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து இருப்பதால் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் குறித்து வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல் களையும் கருத்தில் எடுத்துக்கொள்வேன் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* சீனாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாகாணங்களில் சுமார் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கையின் இந்த ருத்ர தாண்டவத்துக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் மாயமாகி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
* பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் நடந்த பரிசோதனையில் 31 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலகைச்சுற்றி...
* பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள டாபா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.
3. உலகைச்சுற்றி...
* நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காவ்கியா நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. உலகைச்சுற்றி...
* ஈரானுடன் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவுக்கு 8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.56 ஆயிரம் கோடி) மதிப்புடைய ஆயுதங்களை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
5. உலகைச்சுற்றி...
* பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை வங்காளதேசம் நிறுத்தி வைத்துள்ளது.