40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் தலை கண்டுபிடிப்பு


40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் தலை கண்டுபிடிப்பு
x

ரஷ்யாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் ஒன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சைபீரியாவில் உருகிவரும் பனிக்கிடையே, அழிந்த மாமோத் வகை யானைகளின் தந்தம் கிடைக்குமா என அப்பகுதியினர் தேடினர். அப்போது திரெக்டியாக் நதிக்கரையோரம் ஒருவர் உயிரினம் ஒன்றின் தலையை கண்டெடுத்து அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்தார்.

ஆராய்ச்சியாளர்கள் நடத்திய தீவிர பரிசோதனையில், தோலின் மேலுள்ள உரோமம், பல், மூளை, முக தசைகளுடன் இருந்த அந்த ஓநாயின் தலை 40,000 ஆண்டுகளுக்கு முன்புடையது என கண்டுபிடித்துள்ளனர்.

அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி இந்த ஓநாய் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், ஓநாய் தலையை அரிய வகை கண்டுபிடிப்பாக வியப்புடன் பார்க்கின்றனர்.

Next Story