உலக செய்திகள்

கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல் + "||" + Chinese tombs yield earliest evidence of cannabis use

கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல்

கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல்
கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள ஜிர்ஸாங்கல்  பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன் உள்ள  பழங்காலக் கல்லறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அங்குள்ள கல்லறைகளில் புதையுண்ட சடலங்களைச் சுற்றி வட்ட வடிவில் கற்கள் சடங்குக்காக நடப்பட்டுள்ளன.

பின்  அங்கு, அகழாய்வு மேற்கொண்டபோது சில கோப்பைகளில் கற்களையும், துடிக்கத் துடிக்கக் கொடுமைப்படுத்தி கொல்லப்பட்டு நரபலி கொடுத்தவரின் எலும்புகளையும் போட்டு அதனுள் கஞ்சாவையும் போட்டு புதைத்துள்ளனர்.

இந்த வழக்கம் உயர்மட்டக் குடிகளில் இருந்ததா? அல்லது அனைத்து பிரிவினரும் பங்கேற்ற நிகழ்வா? என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன் சீன எல்லையில் நடைமுறையில் இருந்து உள்ளது. இதுவரை கண்டறியப்பட்டதிலேயே இதுதான் மிகவும் பழமையானது என சயின்ஸ் அட்வான்ஸ்ட் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. செடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்
தெலுங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் செடிகளை சாப்பிட்டதால் இரண்டு ஆடுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளன.
2. விமானத்தில் மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவர்
விமானத்தில் பயணித்த மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
3. இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்
சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
4. வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையில் பெரிய மலைப்பாம்பு ஓய்வெடுத்து கொண்டு இருந்ததை கண்டு வீட்டை சேர்ந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
5. உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்கள்
உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்களின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.