உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் நடந்த பரிசோதனையில் 31 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* ஓமன் வளைகுடா பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு காரணம், ஈரான்தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். அதே நேரத்தில் அந்த நாட்டை சமசர பேச்சு வார்த்தைக்கு அவர் அழைத்து இருக்கிறார்.

* பிரேசிலில் கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது அதிபர் ஜெயிர் போல்சொனரோவை குத்தி கொல்ல முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அடிலியோ பிஸ்போ டி ஒலிவெய்ரோ, மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறி கோர்ட்டு விடுதலை செய்து விட்டது.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத்தலைவருமான மரியம் நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். அவர் அந்த அழைப்பை ஏற்றார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) லாகூர் ரெய்விண்டில் இவர்களின் சந்திப்பும், பேச்சு வார்த்தையும் நடக்கிறது.

* ஈராக் பிரதமர் அதெல் அப்துல் மஹதியை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சின்போது, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
* ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வரும் சூழலில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஹாங்காங்கில் சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்படுவார்கள் என சீனா தெரிவித்துள்ளது.
2. உலகைச்சுற்றி...
* வெனிசூலா நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்து வருகிறது. இந்த பிரச்சினையில் ஐ.நா. சபையின் தலையீட்டை வெனிசூலா கோரி உள்ளது.
3. உலகைச்சுற்றி...
* சீனாவின் ஹெனன் மாகாணத்தில் உள்ள உயிரியல் தொழிற்கூடத்தில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
4. உலகைச்சுற்றி...
* அகதிகள் வருகையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்க ஆயுத படைகளை ஒருபோதும் தங்களது பிராந்தியத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என மெக்சிகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
5. உலகைச்சுற்றி...
* பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள டாபா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.