நியூசிலாந்தின் கெர்மடக் தீவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
* நியூசிலாந்தின் கெர்மடக் தீவில் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாகவும், 5.30 மணிக்கு 6.6 புள்ளிகளாகவும் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.
* ஓமன் வளைகுடாவில் அண்மையில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் என குற்றம் சாட்டிய சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், “நாங்கள் போரை விரும்பவில்லை. அதே சமயம் ஆனால் எங்கள் மக்களுக்கு, இறையாண்மைக்கு, நலனுக்கு, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த விஷயத்தையும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம்” எனவும் கூறினார்.
* கென்யாவின் கிழக்கு பகுதியில் சோமாலியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள வாஜிர் நகரில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களது வாகனம் சாலைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கியது. இதில் போலீசார் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
இங்கிலாந்து - நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நாளை தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.