உலக செய்திகள்

நியூசிலாந்தில் பயங்கரம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 விமானிகள் பலி + "||" + Terror in New Zealand: Flights face to face confrontation; 2 pilots killed

நியூசிலாந்தில் பயங்கரம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 விமானிகள் பலி

நியூசிலாந்தில் பயங்கரம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 விமானிகள் பலி
நியூசிலாந்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 விமானிகள் பலியாயினர்.
வெலிங்டன்,

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி தவிர பயணிகள் இல்லை.


அதே வேளையில் மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மாஸ்டர்டன் விமான நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்த விமானத்திலும் விமானி தவிர பயணிகள் இல்லை.

இந்த 2 விமானங்களும் விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் 2 விமானங்களிலும் தீப்பிடித்தது.

பின்னர் அந்த விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
2. உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
3. பாகிஸ்தானில் பயங்கரம்: மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை - 5 பேர் பலி
பாகிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் பலியாகினர்.
4. உலகைச்சுற்றி...
நியூசிலாந்தின் கெர்மடக் தீவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
5. உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில், பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...