ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ் இழுத்துச் செல்ல முயன்றது


ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ்  இழுத்துச் செல்ல முயன்றது
x
தினத்தந்தி 17 Jun 2019 5:35 AM GMT (Updated: 17 Jun 2019 8:06 AM GMT)

ஜப்பானில் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ் இழுத்துச் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஜப்பான் கார்ரொ தீபகற்ப பகுதியில்  ஆழ்கடலுக்குள் வீரர்கள் சிலர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆக்டோபஸ் ஒன்று வீரர் ஒருவரை பிடித்து இழுத்துப் பார்த்தது. ஆனால் அந்த வீரர் தொடர்ந்து நீந்திச் சென்று கொண்டிருந்தார்.

ஆனாலும் ஆக்டோபசும் விடாப்பிடியாக நீச்சல் வீரரின் கால்களைப் பிடித்துக் கொண்டு மீண்டும் இழுக்க முயன்றது. பிளாஸ்டிக் பொருட்களால் அவர் தாக்கியதால் ஒரு கட்டத்தில் தோற்றுப்போன ஆக்டோபஸ்  தனது நிறத்தை மாற்றிக்கொண்டு பாறைகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. 

இந்த பெரிய ஆக்டோபஸ்கள் பசிபிக் லாஸ்கா மற்றும் ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் நீரில் வாழ்கின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய  ஆக்டோபஸ் ஒன்று  மூன்று குட்டி யானைகளைப் போன்று  600 பவுண்டுகள் எடையுள்ளதாக  இருந்தது.

Next Story