உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய அமெரிக்க குடும்பத்தினர் மர்ம மரணம் + "||" + 4 member Indian American family found dead with gunshot wounds in US

அமெரிக்காவில் இந்திய அமெரிக்க குடும்பத்தினர் மர்ம மரணம்

அமெரிக்காவில் இந்திய அமெரிக்க குடும்பத்தினர் மர்ம மரணம்
அமெரிக்காவில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இந்திய அமெரிக்க குடும்பத்தினர் மர்ம மரணம் அடைந்த நிலையில் வீட்டில் கிடந்துள்ளனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஐயோவா நகரில் வசித்து வந்தவர் சந்திரா என அழைக்கப்படும் சந்திரசேகர் சுங்கரா (வயது 44).  இவரது மனைவி லாவண்யா சுங்கரா (வயது 41).  இவர்களுக்கு 15 மற்றும் 10 வயதில் 2 மகன்கள் இருந்தனர்.

இவர்கள் வசித்த வீட்டில் 2 பெரியவர்கள் மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேர் விருந்தினர்களாக தங்கி இருந்துள்ளனர்.  சந்திரா அங்குள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், சந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 4 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் வீட்டில் பலியாகி கிடந்துள்ளனர்.  இதுபற்றி அறிந்த சந்திராவின் உறவினர்களில் ஒருவர் சம்பவம் நடந்த அன்று காலை திடீரென வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து கூச்சல் போட்டுள்ளார்.

அந்த வழியே சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.  இதன்பின் போலீசார் வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  அதன் முடிவு வந்தபின்பே உண்மையான விவரம் தெரிய வரும்.  இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.  தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.