உலக செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் வெட்டிக்கொலை + "||" + Pakistani blogger and journalist known for criticising army hacked to death

பாகிஸ்தான் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் வெட்டிக்கொலை

பாகிஸ்தான் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் வெட்டிக்கொலை
பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்த பிரபல வலைத்தள கட்டுரையாளர் முகமது திலால் கான். சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் பிரபலமானவர். இவரை ‘பேஸ்புக்’கில் 16 ஆயிரம் பேரும், டுவிட்டரில் 22 ஆயிரம் பேரும் பின்தொடர்கிறார்கள்.


இந்த நிலையில், நேற்று காலை முகமது திலால் கானுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முகமது திலால் கானை குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி அழைத்தார்.

அதன்படி அவர் தனது நண்பரை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு சென்றார். அங்கு தயார் நிலையில் இருந்த மர்மநபர்கள் கத்தி முனையில் அவர்கள் இருவரையும் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்கள் முகமது திலால் கானை கத்தியால் குத்தி கொலை செய்தனர். அவரது நண்பரையும் கத்தியால் சரமாரியாக குத்தினர். ஆனால் அவர் படுகாயங்களுடன் அவர்களிடம் இருந்து தப்பினார்.

அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முகமது திலால் கானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கான் தொடர்ந்து பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத்துறையை விமர்சனம் செய்துவந்துள்ளார். கொலை செய்யப்பட்டதை அடுத்து #Justice4MuhammadBilalKhan என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டர் வாசிகள் நியாயம் கோரி வருகின்றனர். இது சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆகி உள்ளது.

ராணுவத்தையும், உளவுத்துறையையும் விமர்சனம் செய்தமையால் அவர் கொல்லப்பட்டுள்ளார் என டுவிட்டர் வாசிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவர் கைது
பஞ்சாப் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவரிடம் எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. இந்தியாவுடன் தபால் போக்குவரத்தை நிறுத்திய பாகிஸ்தான் - விதிமீறல் என மத்திய மந்திரி கண்டனம்
இந்தியாவுடனான தபால் போக்குவரத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளது. இது சர்வதேச விதிமீறல் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. 3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: இந்தியாவின் கூற்றை நிராகரித்தது பாகிஸ்தான் ராணுவம்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்ததாக கூறிய இந்தியாவின் தகவலை பாகிஸ்தான் இராணுவம் மறுத்து உள்ளது.
4. முட்புதரில் உடல் வீச்சு: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை தலையை தேடும் பணி தீவிரம்
மாயமானதாக தேடப்பட்ட ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முட்புதரில் தலையில்லாத அவரது உடல் மட்டும் மீட்கப்பட்டது. தலையை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்திய பங்கின் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடமாட்டோம் - பிரதமர் மோடி உறுதி
பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்திய பங்கின் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.