உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 17 Jun 2019 10:15 PM GMT (Updated: 17 Jun 2019 7:41 PM GMT)

ஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

* தென்ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் பஸ்சும், மினி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

* துருக்கியின் முக்லா மாகாணத்தின் போர்டம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து 40 அகதிகளை ஏற்றிச்சென்ற படகு, சற்றும் எதிர்பாராத வகையில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒருவர் மாயமாகி உள்ளார்.

* ஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சிர்போன் நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று, சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் திடீரென தூங்கியதால், பஸ் எதிர் திசையில் வந்த ஒரு லாரி, ஒரு வேன் மற்றும் 2 கார் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த கோரவிபத்தில் 12 பேர் உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

* இஸ்ரேலில் யூதர்கள் குடியிருக்கும் ‘கோலன் ஹைட்ஸ்’ என்ற கிராமத்தின் பெயரை ‘டிரம்ப் ஹைட்ஸ்’ என மாற்றியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story